Posts

Showing posts from October, 2018

ஜவ்வரிசி இட்லி

Image
தேவையானவை  வெல்லம் - 100 கிராம்  பால் - 100 மில்லி  இட்லி மாவு - ஒரு கிலோ  ஜவ்வரிசி - 200 கிராம் செய்முறை : Step 1. முதலில் ஜவ்வரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைத்த பின்பு அதனை மிக்ஸியில் அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். Step 2. வாணலியில் லேசாக அந்தப் பொடியை வறுத்துக்கொண்டு அதனுடன் பால் மற்றும் பொடி செய்த வெல்லத்தைச் சேர்த்து பாகு போல காய்ச்சவும்.. Step 3. மாவு கொஞ்சம் எடுத்து இட்லித் தட்டில் ஊற்றி இந்தப் பாகுவை கொஞ்சம் ஊற்ற வேண்டும். பின்பு அதன் மேல் கொஞ்சம் மாவை ஊற்றி வேக வைக்கவும்

தக்காளி இட்லி

Image
தேவையானவை  பூண்டு – 3 பல்  மிளகாய்தூள் – ஒன்றரை டீஸ்பூன்  மல்லித்தழை – சிறிதளவு.  அரைக்க: இஞ்சி – 1 துண்டு  தக்காளி – 2,  மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்  பெரிய வெங்காயம் – 2  இட்லி மாவு – 2 கப் செய்முறை : Step 1. முதலில் இட்லி மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்குங்கள். Step 2. அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேருங்கள். Step 3. அத்துடன் சிட்டிகை உப்பு சேர்த்து, வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி, அரைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக கிளறுங்கள். Step 4. பின்பு தக்காளி, தேவையான உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி இட்லி, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்குங்கள்.

ஸ்டஃப்டு மசாலா இட்லி

Image
தேவையானவை  எண்ணெய் - 2 தேக்கரண்டி  மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி  உப்பு - தேவைக்கேற்ப  மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி  பட்டாணி - 1/2 கப்  கடுகு - 1/2 தேக்கரண்டி  சீரகம் - 1/2 தேக்கரண்டி  சீரகம் - 1/2 தேக்கரண்டி  உருளை கிழங்கு - 2 (பெரியது)  இட்லி மாவு - ஒரு பெரிய கப் அளவு  சீரகம் - 1/2 தேக்கரண்டி செய்முறை :  Step 1. முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து விடவும். கடுகு, சீரகம் பொரிந்ததும் மசித்து வைத்துள்ள கலவையை சேர்த்துப் பிரட்டி விட்டு, உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும். Step 2. அதனுடன் பொடி வகைகளைச் சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து பிரட்டி விட்டு கெட்டியானதும் இறக்கவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும், இட்லி தட்டில் துணி போட்டு முதலில் அரை கரண்டி மாவை குழியில் ஊற்றவும். Step 3. அடுத்து ஸ்பூனால் மசாலாவை எடுத்து வைத்து மேலே மீண்டும் அரை கரண்டி மாவை ஊற்றவும். இப்படியே இட்லி மாவை ஊற்றி வேக வைக்கவும் Step 4. . இட்லி வெந்ததும் எடுக்கவும். சுவைய...

ஃப்ரைடு இட்லி

Image
தேவையானவை  கறிவேப்பிலை, மல்லித்தழை – தலா சிறிதளவு  எலுமிச்சம்பழச் சாறு (விருப்பப்பட்டால்) – ஒரு டேபிள்ஸ்பூன்.  இட்லி மாவு – 2 கப், இட்லி மிளகாய்ப் பொடி – 2 டேபிள்ஸ்பூன்  பெரிய வெங்காயம் – 2 செய்முறை : Step 1. முதலில் மாவை சிறு சிறு இட்லிகளாக ஊற்றுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, அத்துடன் சிட்டிகை உப்பு சேருங்கள் Step 2. . வெங்காயம் நிறம் மாறி வதங்கிய பிறகு, இட்லிகள், இட்லிப் பொடி, எலுமிச்சம்பழச் சாறு, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்குங்கள். Step 3. இதற்குத் தொட்டுக்கொள்ளவே எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடக்கூடிய அசத்தலான ஸ்நாக்ஸ்.

லாலிபாப் இட்லி

Image
தேவையானவை  எண்ணெய் - தேவையான அளவு.  லாலிபாப் இட்லி செய்வது எப்படி  பல் குத்தும் குச்சிகள் - தேவைக்கேற்ப (பெரிய கடைகளில் கிடைக்கும்).  கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு,முந்திரி,  துவரம் பருப்பு -100 கிராம்,  வத்தல் மிளகாய் -4,  முளைகட்டிய பாசிப்பயறு-100 கிராம்,,  சீரகம், வெந்தயம் - தலா 1 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு -100 கிராம்,  கடலைப் பருப்பு -100 கிராம்,  இட்லி அரிசி-200 கிராம், செய்முறை : Step 1. முதலில் அரிசி, பருப்பு வகைகளை வெந்தயம் சேர்த்து 6 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு சற்று கரகரப்பாக அரைத்து, உப்பு சேர்த்து 4 மணி நேரம் புளிக்கவிடவும் Step 2. . சிறிது எண்ணெயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து, மாவில் கலந்து, நெய் தடவிய குட்டிக்குட்டி கப்புகளில் மாவை ஊற்றி, ஆவியில் வேக விட்டு எடுக்கவும். Step 3. பல் குத்தும் குச்சியில் ஒவ்வொரு இட்லியாகச் செருகி, சிவப்பு மற்றும் பச்சை சட்னியுடன் பரிமாறவும். இப்போது சுவையான லாலிபாப் இட்லிரெடி...

மசாலா இட்லி

Image
தேவையானவை  பெரிய வெங்காயம்- 1  கறிவேப்பிலை- 9  கடுகு- 1 டீஸ்பூன்  வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்  நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்  கறிவேப்பிலை- 1 இணுக்கு  இட்லி- 8  பட்டை, சோம்பு,ஏலக்காய்- சிறிதளவு  இஞ்சி- 1 துண்டு  சிவப்பு நிறமூட்டி- சிறிதளவு செய்முறை : Step 1. முதலில் இட்லிகளை ஓரளவு பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் கறிவேப்பிலை, சிறிது கொத்தமல்லி, பச்சைமிளகாய் இஞ்சி, பட்டை சோம்பு மசாலாப் பொருட்களைச் சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும். Step 2. தாளிக்கத் தேவையானவற்றைத் தாளித்துக் கொண்டு அரைத்தக் கலவையைப் பச்சை வாடை போக வதக்கவும். இதனுடன் நறுக்கிய இட்லித்துண்டுகளைச் சேர்த்து வதக்கி எடுக்க சுவையான மசாலா இட்லி தயார்.

அவல் தோசை

Image
தேவையானவை  அரிசிமாவு - சிறிதளவு  கெட்டி அவல் - ஒரு கப்  உப்பு - சுவைக்கேற்ப  எண்ணெய் _ தேவையான அளவு. செய்முறை : Step 1. முதலில் அவலை 20 நிமிடம் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பிறகு அத்துடன் அரிசிமாவு, உப்பு போட்டு, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். Step 2. தோசைக்கல்லில் இந்த மாவை மெல்லிசாக வார்த்து எடுக்கவும். தேங்காய் சட்னி அல்லது மிளகாய் சட்னி தொட்டு சுடச்சுட சாப்பிட்டால், அமிர்தமாக இருக்கும்

சேமியா நூடுல்ஸ்

Image
தேவையானவை  சேமியா – 1 கப்  கேரட் – 1, பீன்ஸ் – 6  குடமிளகாய் – சிறியதாக 1  கோஸ் – 50 கிராம்  கோஸ் – 50 கிராம்  பெரிய வெங்காயம் – 1  பச்சை மிளகாய் – 2  இஞ்சி – 1 துண்டு  பூண்டு – 6 பல்  வெங்காயத் தாள் – ஒரு கைப்பிடி  சோயா சாஸ் – அரை டீஸ்பூன்  உப்பு – தேவைக்கு  மிளகுதூள் – 1 டீஸ்பூன்.  எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் செய்முறை : Step 1. முதலில் 5 கப் தண்ணீரை கொதிக்கவைத்து பின் சேமியாவை வேக வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும் . Step 2. காய்கறிகளை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள் (பூண்டு, இஞ்சி, மிளகாய் உள்பட). ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து , வெங்காயத் தாள் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேருங்கள். Step 3. அத்துடன் சோயா சாஸ் ,உப்பு சேர்த்து 4 நிமிடம் வதக்கி சேமியாவை சேருங்கள். அத்துடன் உப்பு, வெங்காயத் தாள், , மிளகுதூள் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். சுவையான சேமியா நூடுல்ஸ் தயார்

ரைஸ் கட்லெட்

Image
தேவையானவை  சாதம் - 1 கப்  மல்லித்தழை - சிறிதளவு  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  சர்க்கரை - 1 டீஸ்பூன்  எண்ணெய் - தேவையான அளவு  உப்பு - சுவைக்கேற்ப. செய்முறை :  Step 1. முதலில் நிலக்கடலை பொடி தவிர மேலே கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். Step 2. பிறகு, இதை சிறிய சதுரங்களாக தட்டி, நிலக்கடலை பொடியில் புரட்டி எடுத்து, எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்

டின்னர் பூரி

Image
தேவையானவை  கோதுமைமாவு : 300 கிராம்  எண்ணெய் : 1 மேஜைக்கரண்டி  உப்பு : 1 தேக்கரண்டி செய்முறை :  Step 1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சலித்து அதில் உப்பு போட்டு , வெண்ணெய் சேர்த்து நன்கு ஒன்று சேரப் பிசைந்துவிட்டு பின் தண்ணீர் விட்டு பிசைந்து தனியே வைக்கவும். Step 2. 25 நிமிடம் சென்ற பின் பூரி மாவை வட்டமான வடிவில் இட்டு வாணலியில் எண்ணெய் அல்லது டால்டாவில் பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும் Step 3. 500மி.லி. கோதுமைமாவை பூரி மாவு பக்குவத்தில் பிசைவதற்கு சுமார் 4 அவுன்ஸ் அல்லது 100மி.லி. தண்ணீர் தேவைப்படும்.

மைசூர் மசாலா தோசை

Image
தேவையானவை  தோசை மாவு - ஒரு கப்  உருளைக்கிழங்கு - 3  கடுகு - அரை தேக்கரண்டி  உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி  கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி  கறிவேப்பிலை - ஒரு கொத்து  பச்சை மிளகாய் - 3  பெரிய வெங்காயம் - 2  கடலை மாவு - ஒரு மேசைக்கரண்டி  சிறிய எலுமிச்சை - ஒன்று  கொத்தமல்லித் தழை - 2 கொத்து  உப்பு - அரை தேக்கரண்டி  எண்ணெய் - 3 மேசைக்கரண்டி  மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி செய்முறை :  Step 1. முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். Step 2. அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமானதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். Step 3. கரண்டியால் மீண்டும் ஒரு முறை உருளைக்கிழங்கை மசித்துவிட்டு கிளறி, அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 8 நிமிடங்கள் கொதிக்கவிடவும். Step 4. கொதித்ததும் மஞ்சள் தூள் போட்டு நன்கு கிளறிவிடவும்.கடலை மாவ...

முட்டை அடை தோசை

Image
தேவையானவை  துவரம்பருப்பு - ஒரு கை  பாசிப்பருப்பு - 1 ஸ்பூன்  பெரிய வெங்காயம் - 2  உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்  வற்றல் மிளகாய் - 2  பச்சை மிளகாய் - 3  கறிவேப்பிலை - ஒரு கொத்து  உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்  கொத்தமல்லி - கால் கப் செய்முறை : Step 1. வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * பருப்பு வகைகள், மிளகாய் வற்றலை நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். * நன்றாக ஊறியதும் அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். Step 2. * ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும். * இந்த முட்டை கலவையை மாவுக்கலவையுடன் சேர்த்து, அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும். * Step 3. தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய சிறிய அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். * சூப்பரான மாலை நேர டிபன் முட்டை அடை ரெடி.

கொத்தமல்லி புதினா தோசை

Image
தேவையானவை  தோசை மாவு - 4 குழிக்கரண்டி  நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடி  பச்சை மிள்காய் - 2  நறுக்கிய புதினா - ஒரு கைப்பிடி  நறுக்கிய வெங்காயம் - 1  உப்பு,எண்ணெய் - தேவைக்கு செய்முறை :  Step 1. முதலில் தோசை மாவோடு நறுக்கிய மல்லி,புதினா,பச்சை மிளகாய்,வெங்காயம்,தேவைக்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். Step 2. தோசைக்கலத்தை காயவிட்டு சிறிது எண்ணெய் தடவி கலந்த தோசை மாவை தேவைக்கு விட்டு வட்டமாக பரத்தி,பரத்திய மாவின் மேல் சிறிது எண்ணெய் தெளித்து,மூடி விடவும். Step 3. தோசை ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். சுவையான கொத்தமல்லி புதினா தோசை ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள எண்ணெய் கலந்த இட்லிப்பொடியே பொருத்தமாக இருக்கும்

பொடி தோசை

Image
தேவையானவை  தோசை மாவு – 1 கப்  இட்லி பொடி – தேவையான அளவு  வெங்காயம் – 1  கொத்தமல்லி – சிறிது  எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : Step 1. முதலில் வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, மெல்லிய தோசையாக சுடவும். Step 2. பின்னர் அதன் மேல் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மற்றும் இட்லி பொடி தூவி, மேலே எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும். Step 3. பின்பு தோசையை திருப்பி போட்டு, 1 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறினால், சுவையான வெங்காய பொடி தோசை ரெடி

பாம்பே சட்னி

Image
தேவையானவை  கடலைப்பருப்பு. : 2 டேபிள்ஸ்பூன்  பச்சை மிளகாய். : 2  மிளகாய் வற்றல். : 2  வெங்காயம். : 1(பொடியாக நறுக்கவும்)  தக்காளி. : 1  தேங்காய் துருவல். : 1 டேபிள்ஸ்பூன்  கடுகு. : 1 டீஸ்பூன்  உளுந்து. : 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை. : சிறிது  கொத்தமல்லி. : சிறிது செய்முறை :  Step 1. கடலைப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு நன்றாக வாசனை வரும்வரை வறுக்கவும். Step 2. பிறகு தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கடலைப்பருப்பு தேங்காய் துருவல் பச்சை மிளகாய் மிளகாய் வற்றல் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். Step 3. கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். Step 4. மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.சீக்கிரம் கெட்டி தன்மை வரும். அப்போது இன்னும் கொஞ்...

தோசை மாவு ஆப்பம்

Image
தேவையானவை  பச்சரிசி - இரண்டு டம்ளர்  உளுந்து - 3 டேபிள்ஸ்பூன்  வெந்தயம் - 1 டீஸ்பூன்  சாதம் - 1 கப்  சோடா உப்பு - பெரிய பின்ச்  சர்க்கரை - ஒரு டீஸ்பூன்  உப்பு - தேவைக்கு ஏற்ப செய்முறை : Step 1. அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து நன்கு அலசி சுமார் 6 மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீர் வடித்து விட்டு சாதம் கலந்து மிக்ஸியில் ஒரு முறை அல்லது இரு முறையாகவோ போட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். Step 2. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு, சோடா உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு வைக்கவும். முதல் நாள் மாலை அரைத்தால் மறுநாள் காலை சுட சரியாக இருக்கும். Step 3. குறைந்தது 14 மணி நேரம் மூடி வைக்கவும். மாவு ஒரு ஒன்னரை அல்லது இரண்டு இன்ச் அளவு பொங்கி கலக்கி பார்த்தால் லேசாக இருக்கும். நன்கு கலந்து தோசை மாவை விட கொஞ்சம் இளகுவாக கரைத்து கொள்ளவும். Step 4. ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து நான்ஸ்டிக் ஆப்பச் சட்டி நன்கு காய்ந்த பின்பு மாவை ஊற்றவும். ஆப்பச் சட்டியின் கைப்பிடியை பிடித்து மாவு வ...

ராகி – முந்திரி ரவா தோசை

Image
தேவையானவை  கேழ்வரகு மாவு – அரை கப்,  முந்திரிப்பருப்பு – 20 (சிறுதுண்டுகளாக உடைத்துக்கொள்ளவும்)  ரவை – ஒரு கப்,  அரிசி மாவு – கால் கப்,  கோதுமை மாவு, மைதா மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,  நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப்,  மிளகு – அரை டீஸ்பூன் (உடைத்துக்கொள்ளவும்),  சீரகம் – ஒரு டீஸ்பூன்,  நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்,  எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை : Step 1. கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, கேழ்வரகு மாவு, ரவை ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். Step 2. இதனுடன் உப்பு, சீரகம், மிளகு, நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லித்தழை, முந்திரி சேர்த்து, நீர் விட்டுக் கரைக்கவும். (ஒரு பங்கு மாவுக்கு 2 பங்கு நீர் விட்டுக் கரைக்கலாம்). Step 3. 15 நிமிடம் அப்படியே வைக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை தோசையாக ஊற்றி, திருப்பிப் போட்டு வேகவிட்டு முறுகலாக எடுக்கவும்.

கம்பு – ஜவ்வரிசி இட்லி

Image
தேவையானவை  கம்பு – ஒரு கப்  இட்லி அரிசி – 3 கப்,  ஜவ்வரிசி – அரை கப்  உப்பு – தேவைக்கேற்ப.  கடுகு – ஒரு டீஸ்பூன்,  உளுந்து – ஒரு டீஸ்பூன்,  கறி வேப்பிலை – சிறிதளவு,  பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்  பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை  பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்)  எண்ணெய் – சிறிதளவு. செய்முறை :  Step 1. கம்பு, ஜவ்வரிசி, இட்லி அரிசியை தனித்தனியே 3 – 4 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, கிரைண்டரில் ஒன்றாக சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். Step 2. இதை 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, தாளிக்க வேண்டியதை தாளித்து மாவில் சேர்த்துக் கிளறி, இட்லித் தட்டில் இட்லியாக ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

மல்டி க்ரெய்ன் ஊத்தப்பம்

Image
தேவையானவை  பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா ஒரு கப்,  வெள்ளை உளுந்து, பச்சைப் பயறு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கப்,  கொண்டைக்கடலை – கால் கப்,  வெந்தயம் – அரை டீஸ்பூன்,  கெட்டித் தயிர் – தேவையான அளவு,  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.  தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் – 4,  எண்ணெய் – சிறிதளவு. செய்முறை :  Step 1. அனைத்து தானியங்களையும் நீர், தயிர் சேர்த்து 4 மணிநேரம் ஊறவைத்து, கிரைண்டரில் அரைத்து, கடைசியில் உப்பு சேர்த்து வைக்கவும். Step 2. 6 மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். ஊத்தப்பம் ஊற்றும் சமயத்தில், தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, மாவில் போட்டுக் கலக்கவும். Step 3. தோசைக்கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு, மாவை கனமான வட்டமாக ஊற்றி இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்

கார்லிக் பரோட்டா

Image
தேவையானவை  மைதா – ஒரு கப்,  இஞ்சி – பூண்டு  விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்,  சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,  பேக்கிங் பவுடர் – கால் டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை :  Step 1. மைதாவோடு உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். இதில் சர்க்கரை, சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து, நீர் விட்டு, தளர்வான, மிருதுவான மாவாக பிசையவும். Step 2. இதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து இன்னொரு முறை அடித்து பிசைந்து… எண்ணெய் தடவி 6 மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, மாவை உருண்டை களாக உருட்டவும். சப்பாத்தி இடும் மனை மீது Step 3. சிறிதளவு மைதா தூவி, மாவு உருண்டையை வைத்து மெல்லிய சப்பாத்திகளாக இடவும். அதன் மீது எண்ணெயை பரவலாக தடவி, புடவை கொசுவம் போல் மடித்து பின்னர் உருண்டைகளாக்கவும். பிறகு Step 4. இதனை கனமான பரோட்டாக்களாக தட்டவும். தோசைக்கல்லை சூடாக்கி, பரோட்டாவைப் போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். பிறகு பரோட்டாவின் ஓரங்களை இரண்டு கைகளுக்கு Step 5. நடுவே வைத்து தட்டவும். இப்போது அடுக...

முளைப்பயறு சப்பாத்தி

Image
தேவையானவை  கோதுமை மாவு - 2 கப்,  உப்பு - அரை டீஸ்பூன்,  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,  எண்ணெய் - நெய்  கலவை - தேவையான அளவு.  பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,  முளைப்பயறு - முக்கால் கப்,  பச்சை மிளகாய் - 2,  பூண்டு (விருப்பப்பட்டால்) - 3 பல்,  உப்பு - தேவையான அளவு,  எண்ணெய் - 2 டீஸ்பூன். செய்முறை : Step 1. முதலில் முளைப்பயறை ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள் . ஆறிய பின் கரகரப்பாக அரைக்கவேண்டும் .பின் பூண்டு, பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைக்கவேண்டும். Step 2. பின் எண்ணெயைக் காயவைத்து, சிறு தீயில் பூண்டு, மிளகாய் விழுதை வதக்குங்கள்.பின் பச்சை வாசனை போன பிறகு, முளைப்பயறு அரைத்த விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள். Step 3. பின்பு கோதுமை மாவை வழக்கம்போல பிசைந்து, சப்பாத்திகளாக திரட்டி, நடுவே முளைப்பயறு பூரணத்தை வைத்து, மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து, ஓரங்களை ஒட்டி எண்ணெய் விட்டு வேகவிடவேண்டும்

ஸ்வீட் இடியப்பம்

Image
தேவையானவை  அரிசி மாவு - 3 கப்  தேங்காய் - 1/2 மூடி  சர்க்கரை - 200 கிராம்  நெய் - 25 கிராம்  ஏலம்,பட்டை,முந்திரி, - 5  உப்பு - சிறிது செய்முறை : Step 1. முதலில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும் , Step 2. மாவுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து மற்றொரு பாத்திரத்தில் , கொதிக்கும் நீரை எடுத்து மாவில் கொஞ்சமாக ஊற்றவும். Step 3. பின்பு கிளறவும் , பிறகு இடியப்ப அச்சில் வைத்து பிழியவும் , பிறகு தேங்காய்,முந்தரி,ஏலம்,பட்டை சேர்த்து கடாயில் நன்கு சிவந்ததும் இடியப்பத்தை நன்கு கிளறவும் பின்பு சுவையான ஸ்வீட் இடியப்பம் ரெடி ..

மசாலா இடியாப்பம்

Image
தேவையானவை  இடியாப்பம் - 1 கப்  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்  தக்காளி - 1  வெங்காயம் - 1  புதினா - சிறிது  மஞ்சள் தூள் - 1 சிட்டிகை  கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்  மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்  கொத்தமல்லி - சிறிது  உப்பு - தேவையான அளவு  பட்டை - 1/4 இன்ச்  எண்ணெய் - 2 டீஸ்பூன்  சோம்பு - 1/2 டீஸ்பூன்  கிராம்பு - 2  கறிவேப்பிலை – சிறிது செய்முறை :  Step 1. முதலில் வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் . Step 2. பிறகு இடியாப்பம் செய்து, அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் உதிர்த்து, குளிர வைக்கவும் . Step 3. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்த பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு சிறிது வதக்கவேண்டும் . Step 4. பிறகு அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, புதினா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் . Step 5. தக்காளி நன்றாக வதங்கிய...

துவரம்பருப்பு இட்லி உப்புமா

Image
தேவையானவை  இட்லி அரிசி - 1 கப்,  மோர் மிளகாய் - 3,  காய்ந்தமிளகாய் - 3.  சோடா உப்பு - 1 சிட்டிகை,  துவரம்பருப்பு - 1/2 கப்,  எண்ணெய் - தேவைக்கு, கடுகு - 1 டீஸ்பூன்,  கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,  உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,  கறிவேப்பிலை - 1 கொத்து.  உப்பு - தேவைக்கு, செய்முறை :  Step 1. முதலில் இட்லி அரிசியையும், துவரம்பருப்பையும் 4 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கொரகொரப்பாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்தெடுத்து 8 முதல் 10 மணி நேரம் வரை புளிக்க வைக்கவேண்டும். Step 2. பிறகு சோடா உப்பு சேர்த்து கலக்கவும். பின் இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து, மாவை ஊற்றி 15 நிமிடம் வேக விடவும். பின்பு இட்லிகள் நன்கு ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். Step 3. பின் கடாயில் எண்ணெயை காயவைத்து மோர் மிளகாய், காய்ந்தமிளகாய் சேர்த்து பொன்னிறமானதும் தனியாக எடுத்து வைக்கவேண்டும் . Step 4. பிறகு அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்...

ஓட்ஸ் சப்பாத்தி

Image
தேவையானவை  கோதுமை மாவு - 3 கப்  பொடித்த ஓட்ஸ் - 1 கப்  உப்பு – தேவையான அளவு  எண்ணெய் – சிறிதளவு செய்முறை :  Step 1. முதலில் ஓட்ஸினை கடாயில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவேண்டும் . பின்னர் அதனை பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும் . Step 2. பிறகு பொடித்த ஓட்ஸ் கோதுமை மாவு, உப்பு, தண்ணீர் மற்றும் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். பின் பிசைந்த மாவினை 10 நிமிடங்கள் ஊற விடவும். Step 3. பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். Step 4. பிறகு அதனை சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும் . Step 5. பின்பு தோசை கல்லினை காய வைத்து சப்பாத்திகளை சுடவும். சுவையான ஓட்ஸ் சப்பாத்தி ரெடி

ஆனியன் ஊத்தப்பம்

Image
தேவையானவை  வெங்காயம் – 1/4 கிலோ  இட்லி மாவு – 2 கப்  பச்சை மிளகாய், கருவேப்பிலை  நெய் , உப்பு – தேவையான அளவு. செய்முறை :  Step 1. முதலில் வெங்காயம் தயார் செய்து கொள்ளவும். தோசைக்கல்லில் மாவைக் குட்டி ஊத்தப்பங்களாகப் போட்டு வெங்காயம் கலவை சேர்த்து நெய் ஊற்றி மூடி வைத்து வேகவைக்கவும். Step 2. திருப்பிப் போட்டுப் பொன்னிறமாக வேகவைத்து சூட்டோடு ஒரு டீஸ்பூன் அமுல் பட்டர் போட்டுப் பரிமாறவும்.

புதினா தக்காளி சட்னி

Image
தேவையானவை  தக்காளி – 2  காய்ந்த மிளகாய் - 7 (அல்லது தேவைக்கேற்ப)  புதினா - கால் கப்  பெரிய வெங்காயம் – ஒன்று  இஞ்சி - சிறிய துண்டு  எண்ணெய் - ஒரு டீஸ்பூன்  உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : Step 1. முதலில் தக்காளி, வெங்காயத்தை நறுக்கவும்.பின் வாணலியில் எண்ணெய் சூடான பின் புதினா, காய்ந்த மிளகாய், தக்காளி, இஞ்சி, வெங்காயத்தை வதக்கவும். Step 2. பின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். விருப்பப்பட்டால், நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கலாம் சுவையான புதினா தக்காளி சட்னி தயார்

சப்பாத்தி புட்டு

Image
தேவையானவை  சப்பாத்தி- 2  சர்க்கரை- 1 1/2மேசைக்கரண்டி  நெய்- 1தேக்கரண்டி  தேங்காய் துருவல்- 1மேசைக்கரண்டி செய்முறை : Step 1. முதலில் சப்பாத்தியை மிக்சியில் இட்டு பொடிக்கவும்.சர்க்கரை, நெய் தேங்காய் துருவல் கலந்து மீண்டும் ஒரு முறை சுற்றி எடுத்தால் சப்பாத்தி புட்டு தயார்.விருப்பப்பட்டால் 1 ஏலக்காயும் சேர்த்து பொடிக்கலாம்.பரிமாறவும்

கறிவேப்பிலை தோசை

Image
தேவையானவை  புழுங்கல் அரிசி - ஒரு கப்  கறிவேப்பிலை - 20 கொத்து  மிளகாய் வற்றல் - 8  பச்சரிசி - ஒரு கப்  சீரகம் - ஒரு மேசைக்கரண்டி  கல் உப்பு - ஒரு தேக்கரண்டி செய்முறை :  Step 1. முதலில் புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி இரண்டையும் 2 மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டரில் ஊற வைத்த அரிசி, மிளகாய் வற்றல், சீரகம், உப்பு கறிவேப்பிலை போட்டு தோசை மாவு பதத்தில் அரைக்கவும். Step 2. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவேண்டும் . Step 3. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் சுற்றிலும் ஊற்றி பரப்பி விடவும். Step 4. பின் மேலே எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து விடவும்பூண்டு சட்னி மற்றும் பூண்டு பொடியுடன் சூடாக சாப்பிடவும்.

தினை புட்டு

Image
தேவையானவை  தினை மாவு - ஒரு கப்  துருவிய தேங்காய் - அரை கப்  ஏலக்காய் - 2  வெல்லம் - 100 கிராம்  எள் - 2 தேக்கரண்டி  தண்ணீர் - கால் டம்ளர் செய்முறை : Step 1. முதலில் தினை மாவை கட்டிகளின்றி உதிர்த்து வைக்கவும். பின் கால் டம்ளர் தண்ணீரில் தேவைக்கேற்ப‌ உப்பு சேர்த்து கலந்து மாவில் தெளித்து நன்கு கலக்கவும். Step 2. பிறகு இதை இட்லி தட்டில் பரப்பி வைத்து மேலே ஈரத்துணி போர்த்தி மூடி போட்டு வேக‌ விடவும். வெந்த பிறகு இதனுடன் துருவிய‌ வெல்லம், துருவிய‌ தேங்காய், ஏலம், எள் சேர்த்து நன்கு கிளறி வைக்கவும். Step 3. சுவையான‌ சத்தான‌ தினை புட்டு தயார்.

எலுமிச்சை சேமியா

Image
தேவையானவை  எலுமிச்சைபழம்  சேமியா - 2௦௦ கிராம்  எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்  கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு  இஞ்சி - சிறிது  பச்சைமிளகாய் - சிறிது  உப்பு - ஒரு சிட்டிகை  பெருங்காயம்,  கறிவேப்பிலை, மல்லி இலை செய்முறை :  Step 1. முதலில் தேவையான எலுமிச்சைபழத்தை [நறுக்கி தண்ணீரில் போட்டு பிழிந்தால் கசப்பு வராது] கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து சிவந்தவுடன்,பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய்போட்டு வதக்கவும். Step 2. எலுமிச்சைபழத்தை பிழிந்து,உப்பு போட்டு வதக்கி அதில் சேமியாவை போட்டு கிளறவும.மேலே கொஞ்சம் பெருங்காயம்,கறிவேப்பிலை, மல்லி இலை போட்டால எலுமிச்சைசேமியா ரெடி.

ராகி நூடுல்ஸ்

Image
தேவையானவை  ராகி நூடுல்ஸ் - ஒரு கப்,  வெங்காயம் - கால் கப்,  வெங்காயத் தாள் - ஒரு டேபிள்ஸ்பூன்  நெய் - தேவையான அளவு  கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்  இஞ்சி & பூண்டு விழுது - கால் டீஸ்பூன்  குடை மிளகாய் - கால் கப், (பொடியாக நறுக்கிய)  கோஸ் - கால் கப், (பொடியாக நறுக்கியது)  எண்ணெய் - தேவையான அளவு  செய்முறை :  Step 1. முதலில் ராகி நூடுல்ஸ்ஸை சிறிது உப்பு நீர் தெளித்து பிசறி,ஆவியில் வேக வைத்து எடுத்து உதிர்த்து வைத்துக்கொள்ளவும். Step 2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி,காய்கறிகளை உப்பு போட்டு வதக்கவும். Step 3. பின்னர் கடைசியாக வெங்காயத்தாளை சேர்த்து, இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். கரம் மசாலாவை சேர்க்கவும். Step 4. வேகவைத்து எடுத்த ராகி நூடுல்ஸையும் அதோடு சேர்த்து கிளறி, ஒரு டீஸ்பூன் நெய், மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

தனியா சட்னி

Image
தேவையானவை  தனியா - கால் கப்  தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 6(அல்லது தேவைக்கேற்ப),  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு  பூண்டு - 2 பல்,  கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு – தேவைக்கேற்ப செய்முறை :  Step 1. முதலில் வாணலியை சூடாக்கி தனியாவை வறுத்து எடுக்கவும். Step 2. பின் சிறிதளவு எண்ணெய் ஊற்றி... காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, புளி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும், Step 3. ஆறிய பிறகு எல்லாப் பொருட்களையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அறைத்தேடுக்கவேண்டும் . Step 4. மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.சுவையான தனியா சட்னி தயார்

ஈஸி ராகி தோசை

Image
தேவையானவை  ராகி மாவு - ஒரு கப்  சீரகம் - சிறிது  மிளகு தூள் - சிறிது  அரிசி மாவு - அரை கப்  உப்பு - தேவையான அளவு  பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கி கொள்ளவும்.  கறிவேப்பிலை - ஒரு கொத்து செய்முறை :  Step 1. முதலில் ஒரு பாத்திரத்தில் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போடவும். பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ரவா தோசை ஊற்றும் பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். Step 2. பிறகு தோசை கல் சூடானவுடன் ரவா தோசை போல் சூற்றிலும் ஊற்றவும்.பின் மேலே எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும். Step 3. மொறு மொறுப்பான ராகி தோசை தயார். சூடாக சாப்பிட்டால் சுவை அதிகம். கார சட்னியுடன் பரிமாறவும்.

கம்பு தோசை

Image
தேவையானவை  கம்பு 1 கப்  ஏலம் அல்லது இஞ்சி அல்லது ஒரே ஒரு கிராம்பு  பச்சை மிளகாய்,  கறிவேப்பிலை,  எண்ணெய்,  தேவையான அளவு உப்பு. செய்முறை :  Step 1. முதலில் கம்பு தானியத்தை எடுத்து முறத்தில் போட்டு நன்றாகப் புடைத்து, அது மூழ்கும்படி தண்ணீர் உள்ள பாத்திரத்தில் ஊறவைக்கவேண்டும். Step 2. நான்கு மணி நேரம் ஊறிய பின் இட்லிக்கு அரைப்பது போல நன்றாக அரைக்க வேண்டும். அதன் பின் மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து புளிக்க வைக்க வேண்டும். Step 3. அடுத்த நாள் காலையில் இட்லி அல்லது தோசை தயாரித்து சாப்பிடலாம். தோசையாக சுடும் போது கூடுதல் ருசிக்காக பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி கறுவேப்பிலை தாளித்து மாவுல் கலந்து தோசையாக சுடலாம். Step 4. கம்பு நன்றாக செரிமானம் ஆவதுடன், உடல் சோர்வை நீக்கி புத்துணர்வுடன் பணியாற்ற ஊட்டம் தரும்.