மசாலா இடியாப்பம்
- இடியாப்பம் - 1 கப்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
- தக்காளி - 1
- வெங்காயம் - 1
- புதினா - சிறிது
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- பட்டை - 1/4 இன்ச்
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- சோம்பு - 1/2 டீஸ்பூன்
- கிராம்பு - 2
- கறிவேப்பிலை – சிறிது
செய்முறை :
Step 1.
முதலில் வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் .
Step 2.
பிறகு இடியாப்பம் செய்து, அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் உதிர்த்து, குளிர வைக்கவும் .
Step 3.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்த பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு சிறிது வதக்கவேண்டும் .
Step 4.
பிறகு அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, புதினா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் .
Step 5.
தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
Step 6.
இறுதியில் அதில் இடியாப்பத்தை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும். சூப்பரான மசாலா இடியாப்பம் ரெடி!!!

Comments
Post a Comment