கம்பு – ஜவ்வரிசி இட்லி
தேவையானவை
- கம்பு – ஒரு கப்
- இட்லி அரிசி – 3 கப்,
- ஜவ்வரிசி – அரை கப்
- உப்பு – தேவைக்கேற்ப.
- கடுகு – ஒரு டீஸ்பூன்,
- உளுந்து – ஒரு டீஸ்பூன்,
- கறி வேப்பிலை – சிறிதளவு,
- பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
- பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்)
- எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை :
Step 1.
கம்பு, ஜவ்வரிசி, இட்லி அரிசியை தனித்தனியே 3 – 4 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, கிரைண்டரில் ஒன்றாக சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும்.
Step 2.
இதை 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, தாளிக்க வேண்டியதை தாளித்து மாவில் சேர்த்துக் கிளறி, இட்லித் தட்டில் இட்லியாக ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.


Comments
Post a Comment