முட்டை அடை தோசை
தேவையானவை
- துவரம்பருப்பு - ஒரு கை
- பாசிப்பருப்பு - 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 2
- உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- வற்றல் மிளகாய் - 2
- பச்சை மிளகாய் - 3
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- கொத்தமல்லி - கால் கப்
செய்முறை :
Step 1.
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * பருப்பு வகைகள், மிளகாய் வற்றலை நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். * நன்றாக ஊறியதும் அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
Step 2.
* ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும். * இந்த முட்டை கலவையை மாவுக்கலவையுடன் சேர்த்து, அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும். *
Step 3.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய சிறிய அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். * சூப்பரான மாலை நேர டிபன் முட்டை அடை ரெடி.

Comments
Post a Comment