கம்பு தோசை
- கம்பு 1 கப்
- ஏலம் அல்லது இஞ்சி அல்லது ஒரே ஒரு கிராம்பு
- பச்சை மிளகாய்,
- கறிவேப்பிலை,
- எண்ணெய்,
- தேவையான அளவு உப்பு.
செய்முறை :
Step 1.
முதலில் கம்பு தானியத்தை எடுத்து முறத்தில் போட்டு நன்றாகப் புடைத்து, அது மூழ்கும்படி தண்ணீர் உள்ள பாத்திரத்தில் ஊறவைக்கவேண்டும்.
Step 2.
நான்கு மணி நேரம் ஊறிய பின் இட்லிக்கு அரைப்பது போல நன்றாக அரைக்க வேண்டும். அதன் பின் மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து புளிக்க வைக்க வேண்டும்.
Step 3.
அடுத்த நாள் காலையில் இட்லி அல்லது தோசை தயாரித்து சாப்பிடலாம். தோசையாக சுடும் போது கூடுதல் ருசிக்காக பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி கறுவேப்பிலை தாளித்து மாவுல் கலந்து தோசையாக சுடலாம்.
Step 4.
கம்பு நன்றாக செரிமானம் ஆவதுடன், உடல் சோர்வை நீக்கி புத்துணர்வுடன் பணியாற்ற ஊட்டம் தரும்.

Comments
Post a Comment