மல்டி க்ரெய்ன் ஊத்தப்பம்
தேவையானவை
- பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா ஒரு கப்,
- வெள்ளை உளுந்து, பச்சைப் பயறு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கப்,
- கொண்டைக்கடலை – கால் கப்,
- வெந்தயம் – அரை டீஸ்பூன்,
- கெட்டித் தயிர் – தேவையான அளவு,
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
- தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் – 4,
- எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை :
Step 1.
அனைத்து தானியங்களையும் நீர், தயிர் சேர்த்து 4 மணிநேரம் ஊறவைத்து, கிரைண்டரில் அரைத்து, கடைசியில் உப்பு சேர்த்து வைக்கவும்.
Step 2.
6 மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். ஊத்தப்பம் ஊற்றும் சமயத்தில், தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, மாவில் போட்டுக் கலக்கவும்.
Step 3.
தோசைக்கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு, மாவை கனமான வட்டமாக ஊற்றி இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்

Comments
Post a Comment