ராகி – முந்திரி ரவா தோசை


தேவையானவை
  •  கேழ்வரகு மாவு – அரை கப்,
  •  முந்திரிப்பருப்பு – 20 (சிறுதுண்டுகளாக உடைத்துக்கொள்ளவும்)
  •  ரவை – ஒரு கப்,
  •  அரிசி மாவு – கால் கப்,
  •  கோதுமை மாவு, மைதா மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
  •  நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப்,
  •  மிளகு – அரை டீஸ்பூன் (உடைத்துக்கொள்ளவும்),
  •  சீரகம் – ஒரு டீஸ்பூன்,
  •  நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்,
  •  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை :

Step 1.
கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, கேழ்வரகு மாவு, ரவை ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.

Step 2.
இதனுடன் உப்பு, சீரகம், மிளகு, நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லித்தழை, முந்திரி சேர்த்து, நீர் விட்டுக் கரைக்கவும். (ஒரு பங்கு மாவுக்கு 2 பங்கு நீர் விட்டுக் கரைக்கலாம்).

Step 3.
15 நிமிடம் அப்படியே வைக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை தோசையாக ஊற்றி, திருப்பிப் போட்டு வேகவிட்டு முறுகலாக எடுக்கவும்.

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி