தனியா சட்னி


தேவையானவை

  •  தனியா - கால் கப்
  •  தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
  •  காய்ந்த மிளகாய் - 6(அல்லது தேவைக்கேற்ப),
  •  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
  •  பூண்டு - 2 பல்,
  •  கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
  •  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
  •  எண்ணெய் - 2 டீஸ்பூன்
  •  உப்பு – தேவைக்கேற்ப


செய்முறை : 

Step 1.
முதலில் வாணலியை சூடாக்கி தனியாவை வறுத்து எடுக்கவும்.

Step 2.
பின் சிறிதளவு எண்ணெய் ஊற்றி... காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, புளி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்,

Step 3.
ஆறிய பிறகு எல்லாப் பொருட்களையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அறைத்தேடுக்கவேண்டும் .

Step 4.
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.சுவையான தனியா சட்னி தயார்

Comments

Popular posts from this blog

அவல் தோசை

தக்காளி இட்லி