முளைப்பயறு சப்பாத்தி


தேவையானவை
  •  கோதுமை மாவு - 2 கப்,
  •  உப்பு - அரை டீஸ்பூன்,
  •  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
  •  எண்ணெய் - நெய்
  •  கலவை - தேவையான அளவு.
  •  பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
  •  முளைப்பயறு - முக்கால் கப்,
  •  பச்சை மிளகாய் - 2,
  •  பூண்டு (விருப்பப்பட்டால்) - 3 பல்,
  •  உப்பு - தேவையான அளவு,
  •  எண்ணெய் - 2 டீஸ்பூன்.


செய்முறை :

Step 1.
முதலில் முளைப்பயறை ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள் . ஆறிய பின் கரகரப்பாக அரைக்கவேண்டும் .பின் பூண்டு, பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைக்கவேண்டும்.

Step 2.
பின் எண்ணெயைக் காயவைத்து, சிறு தீயில் பூண்டு, மிளகாய் விழுதை வதக்குங்கள்.பின் பச்சை வாசனை போன பிறகு, முளைப்பயறு அரைத்த விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.

Step 3.
பின்பு கோதுமை மாவை வழக்கம்போல பிசைந்து, சப்பாத்திகளாக திரட்டி, நடுவே முளைப்பயறு பூரணத்தை வைத்து, மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து, ஓரங்களை ஒட்டி எண்ணெய் விட்டு வேகவிடவேண்டும்


Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி