ராகி சேமியா
தேவையானவை
- ராகி சேமியா - 200 கிராம்
- நீர் - 1.5 கப்
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- கேரட் - 1
- பீன்ஸ் - 6
- குடை மிளகாய் - ½
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை :
Step 1.
முதலில் வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
Step 2.
பின்பு பச்சை மிளகாய் மற்றும் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்கு கிளறவும். அடுத்து அதில் உப்பு சேர்த்து காய்கறிகளின் பச்சை வாசம் போகும் நன்கு கிளறவும். காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதில் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் ராகி சேமியா சேர்த்து சிறிது நேரம் நன்கு மூடி வைக்கவும்.
Step 3.
மிதமான தீயில் வேக வைக்கவும். அவ்வப்போது கிளறி விடவும். வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சூடாக பரிமாறவும். சுவையான ராகி சேமியா உப்புமா தயார்.

Comments
Post a Comment