சேமியா தோசை



தேவையானவை
  •  சேமியா – 1 1/2 கப்
  •  பெரிய வெங்காயம் – 1
  •  தக்காளி – 3,
  •  இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  •  மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
  •  எண்ணெய் – 2 தேக்கரண்டி
  •  கடுகு – 1 தேக்கரண்டி
  •  தோசை மாவு – 4 கப்
  •  புதினா – கைப்பிடியளவு
  •  மல்லித்தழை – கைப்பிடியளவு
  •  உப்பு – ருசிக்கு
  •  எண்ணெய் – தேவையானளவு
  •  உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி .



செய்முறை : 

Step 1.
முதலில் சேமியாவை 5 கப் கொதிக்கும் நீரில் சேர்த்து நன்கு வேக விட்டு பின் வடிக்கவும் .

Step 2.
ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேர்க்கவேண்டும் பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்

Step 3.
அத்துடன் மிளகாய்தூள்,தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவேண்டும் , பின் சேமியா சேர்த்து கிளறி இறக்குங்கள் .

Step 4.
பின்பு தோசைக் கல்லை காயவைத்து, மாவில் சிறிதளவு எடுத்து சற்று கனமாக ஊற்றவேண்டும் .

Step 5.
அதன் மேல் சேமியா கலவையை பரவினாற் போல் வைத்து மல்லித்தழை,புதினா தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு நன்கு வேக விட்டு திருப்பவும் பின் சூடாக பரிமாறுங்கள்.

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி