தக்காளி தோசை
தேவையானவை
- பச்சரிசி - ஒரு கப்
- மிளகாய் வற்றல் - 3
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
- துவரம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
- கல் உப்பு - அரை தேக்கரண்டி
- தக்காளி - 2
செய்முறை :
Step 1.
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, மிளகாய் வற்றல், துவரம் பருப்பு, தக்காளி போட்டு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
Step 2.
பின் மிக்ஸியில் ஊற வைத்தவற்றை போட்டு உப்பு, பெருங்காயத் தூள் போட்டு தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
Step 3.
பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கறிவேப்பிலை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
Step 4.
பின் தோசைக்கல்லை அடுப்பில் போட்டு எண்ணெய் தடவி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் முழுவதும் பரவலாக ஊற்றவும்.
Step 5.
பிறகு தோசைக்கல்லில் மாவை ஊற்றி தேய்க்க கூடாது.
Step 6.
மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான தக்காளி தோசை தயார்.

Comments
Post a Comment