இட்லி உப்புமா
தேவையானவை
- இட்லி – 6
- பெரிய வெங்காயம் – 1
- காய்ந்த மிளகாய் – 1
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- உப்பு – ஒரு சிட்டிகை
- கருவேப்பிலை – ஒரு கொத்து
- கடுகு, உளுந்தம் பருப்பு – ஒன்றரை தேக்கரண்டி
- கடலை எண்ணெய் – 3 தேக்கரண்டி
செய்முறை :
Step 1.
முதலில் இட்லிகளை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து உடனே உதிர்க்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும். கடுகு,உளுந்தம் பருப்பு போட்டு வெடிக்கவிடவும்.
Step 2.
உளுந்தம் பருப்பு பொன்னிறமானவுடன் கருவேப்பிலைப் போட்டுக் கிளறி, உடனே பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு பொன்னிறமாகும் வரை அடுப்பை குறைந்த தணலில் வைத்து வதக்கவும்.
Step 3.
பிறகு, மஞ்சள் தூள், உப்புப் போட்டு கிளறி, உதிர்த்து வைத்திருக்கும் இட்லிகளைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

Comments
Post a Comment