காளான் பரோட்டா


தேவையானவை
  •  கோதுமை மாவு – 2 கப்
  •  உப்பு – தேவையான அளவு
  •  நீர் – தேவையான அளவு
  •  எண்ணெய் – பெரிக்க
  •  வெங்காயம் – 1 நடுத்தர அளவு
  •  பூண்டு - 1 தேக்கரண்டி
  •  வெங்காயத் தாள் - 1 கப்
  •  காளான் - 200 கிராம்
  •  ஜீரகத்தூள் – 1 தேக்கரண்டி
  •  பச்சை மிளகாய் - 1
  •  இஞ்சி – 1 தேக்கரண்டி
  •  கரமசாலா தூள் – 1 தேக்கரண்டி
  •  நல்ல மிளகு தூள் - 1 தேக்கரண்டி
  •  உப்பு – தேவையான அளவு


செய்முறை : 

Step 1.
முதலில் கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். உப்பு மற்றும் நீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசையவும். பின்பு அதனை ஒரு பாத்திரத்தால் மூடி சிறிது நேரம் வைக்கவும். பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

Step 2.
பினபு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்ககவும். பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்ப அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.

Step 3.
பின்பு நறுக்கிய காளான் சேர்த்து வேக வைக்கவும். காளான் வெந்தவுடன் ஜீரகத்தூள், கரம் மசாலா தூள், நல்ல மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

Step 4.
பின்பு வெங்காயத் தாள் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு அதனை இறக்கி ஆற வைக்கவும். பின்பு பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து அதனை சம அளவுள்ள சறிய பந்துகளாக உருட்டிக் கொளளவும்.

Step 5.
இரண்டு பந்துகளை எடுத்து அவற்றை சப்பாத்தி போல் விரிக்கவும். அதில் ஒன்றை எடுத்து அதன் மீது காளான் மசாலாவில் சிறிது வைக்கவும். பின்பு இரண்டாவது ரொட்டியை எடுத்து அதன் மீது வைத்து ஓரங்களை அழுத்தி மசாலா வெளியே வராமல் மூடவும்.

Step 6.
மீண்டும் அதனை சப்பாத்தி கல்லில் வைத்து விரித்து எடுக்கவும். பின்பு அதனை தவாவில் வைத்து வேக வைத்து எடுக்கவும்

Step 7.
பின்பு அதனை திருப்பி போட்டு அதன் மீது சிறிது எண்ணெய் தூவி விட்டு பொன்னிறமாகும் வரை வைக்கவும். பின்பு அதனை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.


Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி