சாமை உப்புமா



தேவையானவை

  •  சாமை அரிசி - ஒரு கப்
  •  எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
  •  கடுகு - அரை டீஸ்பூன்
  •  கேரட் - 1
  •  கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
  •  உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
  •  வெங்காயம் - ஒன்று
  •  பச்சை மிளகாய் - ஒன்று
  •  உப்பு - தேவைகேற்ப
  •  கறிவேப்பில்லை - சிறிதளவு



செய்முறை :

Step 1.
முதலில் கேரட், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

Step 2.
ஒரு கப் சாமை அரிசி, மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்

Step 3.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.

Step 4.
வெங்காயம், கேரட் நன்றாக வதங்கியதும் வேகவைத்த சாமை அரிசி, கறிவேப்பில்லை சேர்த்து கலந்து பரிமாறவும். சத்தான சாமை அரிசி உப்புமா ரெடி

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி