காக்ரா


தேவையானவை

  •  கோதுமை மாவு - 2 கப்
  •  உப்பு - ஒரு தேக்கரண்டி
  •  தண்ணீர் - தேவைக்கு


 செய்முறை :

Step 1.
முதலில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, மாவை கெட்டியாகப் பிசையவும். பல நிமிடங்கள் நன்றாகப் பிசையவும்

Step 2.
16 உருண்டைகளாக உருட்டி ஒவ்வொன்றையும் மிக மெல்லிய சப்பாத்தியாக இடவும். ஒரு மெல்லிய தோசைக்கல் வைத்து சப்பாத்தியின் இருபுறமும் சிறிது நெய் தடவி, சிறிது பொன்னிறமாக சுடவும். எல்லா சப்பத்திகளையும் அவ்வாறே சுட்டு வைக்கவும்

Step 3.
ஒரு தடிப்பான தோசைக் கல்லை அடுப்பில் வைக்கவும். கல் சூடானதும், தயாரித்த சப்பாத்தியை மேலேயிட்டு மெல்லிய துணியை உருட்டி ஒரே சீராக சப்பாத்தியின் மேல் அழுத்தவும்.

Step 4.
அதே நேரத்தில், சப்பாத்தி பழுப்பு நிறமாகும் வரை சுற்றி சுற்றி உருட்டவும். திருப்பிப் போட்டு சப்பாத்தி முறுகலாகும் வரை அதே போல் சுடவும்.

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி