பருப்பு இட்லி உப்புமா
தேவையானவை
- இட்லி அரிசி - 1 கப்,
- உப்பு - தேவைக்கு,
- துவரம்பருப்பு - 1/2 கப்,
- சோடா உப்பு - 1 சிட்டிகை,
- மோர் மிளகாய் - 3,
- காய்ந்தமிளகாய் - 3.
- தாளிக்க: எண்ணெய் - தேவைக்கு,
- கடுகு - 1 டீஸ்பூன்,
- கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
- கறிவேப்பிலை - 1 கொத்து.
செய்முறை : பருப்பு இட்லி உப்புமா
Step 1.
முதலில் இட்லி அரிசியையும், துவரம்பருப்பையும் 4 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கொரகொரப்பாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்தெடுத்து 8 முதல் 10 மணி நேரம் வரை புளிக்க வைக்கவேண்டும்.
Step 2.
பிறகு சோடா உப்பு சேர்த்து கலக்கவும். பின் இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து, மாவை ஊற்றி 15 நிமிடம் வேக விடவும். பின்பு இட்லிகள் நன்கு ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.
Step 3.
பின் கடாயில் எண்ணெயை காயவைத்து மோர் மிளகாய், காய்ந்தமிளகாய் சேர்த்து பொன்னிறமானதும் தனியாக எடுத்து வைக்கவேண்டும் .
Step 4.
பிறகு அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, உதிர்த்த இட்லிகளை சேர்க்கவும்.
Step 5.
தனியாக வறுத்து வைத்த மோர் மிளகாய், காய்ந்தமிளகாயை நசுக்கி சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

Comments
Post a Comment