வெள்ளை புட்டு


தேவையானவை

  •  2 கப் அரிசி
  •  1.5 கப் இடித்த சர்க்கரை
  •  {1/2 } தேக்கரண்டி ஏலக்காய்
  •  முந்திரி சிறிது
  •  3 மேஜைக்கரண்டி தேங்காய்



செய்முறை :

Step 1.
முதலில் அரிசியை 30 நிமிடம் நீரில் ஊற வைக்கவும். பின்பு நீரிலிருந்து அரிசியை தனியாக எடுத்து ஒரு சுத்தமான துணியில் வைக்கவும். அப்போது அரிசியில உள்ள நீர் வெளியேறி விடும்.

Step 2.
பின்பு அதனை மெல்லிய மாவாக அரைக்கவும். சட்டியை அடுப்பில் வைத்து அரிசி மாவைப் போட்டு இலேசான பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்

Step 3.
1 கப் தண்ணீரை எடுத்து அதில் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சோர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்த்தும் இறக்கி ஆற வைக்கவும். பின்பு அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை சேர்த்து பிசையவும்

Step 4.
மாவு அரிக்கும் சல்லடையில் மாவை அரித்து எடுக்கவும். இதனால் மாவில் உள்ள கட்டிகள் தனியே வந்து விடும். பின்பு மாவை இட்லி குக்கரில் உள்ள தட்டுகளில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். பின்பு வேக வைத்த மாவை கரண்டியின் உதவியால் மாவை எடுத்து தனியே வைக்கவும்.வேறொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு முந்திரி பருப்பு மற்றும் தேங்காய்துருவலை தனித்தனியே பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். ஒரு சட்டியில் இடித்து வைத்துள்ள சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.கலவை கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.

Step 5.
பின்பு அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.பின்பு அரிசி மாவை அதில் போட்டு நன்கு கலக்கவும்.பின்பு வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான இனிப்பு புட்டு தயார்.

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி