ராகி தோசை ரோல்ஸ்


தேவையானவை

  •  ராகி மாவு (கேழ்வரகு மாவு ) – ஒரு கப்
  •  அரிசி மாவு – 2 டீஸ்பூன்
  •  தானியங்களின் கலவை (கொண்டக்கடலை, பச்சைபயிறு, காராமணி முதலானவை ) – ஒரு கப்
  •  கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  •  பச்சை மிளகாய் – 3
  •  தயிர் – 2 டீஸ்பூன்
  •  கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
  •  நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
  •  உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை : 

Step 1.
தானியங்களை ஊறவைக்கவும். (தேவைப்பட்டால் முளைகட்டிக்கொள்ளலாம் ). ராகி மாவுடன், உப்பு,தேவையான தண்ணீர்,அரிசி மாவு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.(நல்லெண்ணெய் உபயோகப்படுத்தலாம் ).

Step 2.
தானியங்களுடன் உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கரம் மசாலாத்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து, அடை மாவு பதத்துக்கு அரைக்கவும்.

Step 3.
இதை ஆவியில் வேகவைக்கவும். 10 நிமிடங்கள் ஆறவைக்கவும். கட்டியில்லாமல் உதிர்க்கவும். இதனுடன் தயிர் சேர்த்துக் கலக்கவும்.

Step 4.
ராகி தோசையினுள் இக்கலவையை வைத்து, பாய்போல் இறுக்கி சுருட்டவும். உடனடியாக பரிமாறவும்.

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி