ராகி மாவு இடியாப்பம்



தேவையானவை
  •  ராகி மாவு – 1 கப்
  •  அரிசி மாவு – ¼கப்
  •  வெங்காயம் - 1
  •  உப்பு – தேவையான அளவு
  •  நீர் – 2 கப்
  •  நல்லெண்ணெய் –1 தேக்கரண்டி


செய்முறை :

Step 1.
முதலில் கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும் பின்பு ராகி மாவை போட்டு 3-4 நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும் அதன் பின்பு அதனுடன் அரிசி மாவு சேர்க்கவும், சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறவும், அதே நேரம் நீரை கொதிக்க வைக்கவும்

Step 2.
பிறகு அந்த நீரை மாவுக் கலவையுடன் சேர்க்கவும், மாவை நன்கு பிசையவும் , அதனை மூடி 15 நிமிங்கள் வைக்கவும், பிறகு மீண்டும் நன்கு பிசையவும்'பின்பு மாவை இடியப்பம் அச்சினுள் வைக்கவும்,

Step 3.
இடலி தட்டுகளை எடுத்து அதில் எண்ணெய் தடவிக் கொள்ளவும், இடியப்பம் அச்சின் மூலம் மாவை இடியப்பங்களாக செய்து தட்டுகளில் வைக்கவும்,

Step 4.
அவற்றை இட்லி குக்கரில் வைத்து மூடி வைத்து வேக வைக்கவும், இடியப்பம் வெந்ததும் அதனை இறக்கி ஆற வைக்கவும்.

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி