சம்பா ரவை கிச்சடி
தேவையானவை
- சம்பா கோதுமை ரவை - ஒரு கப்
- வெங்காயம், கேரட் - தலா ஒன்று
- குடமிளகாய் (நறுக்கியது)
- பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப்
- பச்சை மிளகாய் - ஒன்று
- கடுகு - அரை டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - சிறிதளவு
- கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
- கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
- எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :
Step 1.
முதலில்சம்பா கோதுமை ரவையை கடாயில் சிவக்க வறுக்கவும். வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
Step 2.
பிறகு கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணியை போட்டு, 3 கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் ரவையை சேர்த்துக் கலந்து... கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து மூடி, அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். 10, 15 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

Comments
Post a Comment