சம்பா ரவை உப்புமா



தேவையானவை
  •  சம்பா ரவை - 1/2 கப்
  •  பச்சை பட்டாணி - 1/2 கப்
  •  கேரட் - 1 (நறுக்கியது)
  •  வெங்காயம் - 1 (நறுக்கியது)
  •  பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
  •  இஞ்சி - 1/2 டீஸ்பூன் (துருவியது)
  •  கடுகு - 1/2 டீஸ்பூன்
  •  கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
  •  தண்ணீர் - 3 கப்
  •  எண்ணெய் - தேவையான அளவு
  •  உப்பு - தேவையான அளவு


செய்முறை : 

Step 1.
முதலில் சம்பா ரவையை நீரில் அலசி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைக்க வேண்டும்.

Step 2.
பின்னர் 2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் ரவையைப் போட்டு நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி வைக்க வேண்டும்.

Step 3.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.

Step 4.
பின்பு துருவிய இஞ்சியை சேர்த்து கிளறி, பச்சை பட்டாணி மற்றும் கேரட் சேர்த்து, பிரட்டி 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

Step 5.
பிறகு அத்துடன் சம்பா ரவையை சேர்த்து, 1 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு, இறக்க வேண்டும்.

Step 6.
பின் குக்கரை திறந்து, அதன் மேல் கொத்தமல்லியை சேர்த்து அலங்கரித்து

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி