மினி இட்லி சாம்பார்



தேவையானவை
  •  துவரம்பருப்பு - 150 கிராம்
  •  மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
  •  மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  •  மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
  •  கத்திரிக்காய் - ஒன்று கேரட் - ஒன்று
  •  உப்பு - தேவைக்கு
  •  தக்காளி - ஒன்று
  •  சின்ன வெங்காயம் - 100 கிராம்
  •  வரமிளகாய் - 4
  •  பச்சைமிளகாய் - 6
  •  கடுகு - கால் தேக்கரண்டி
  •  உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
  •  சீரகம் - கால் தேக்கரண்டி
  •  வெந்தயம் - சிறிதளவு
  •  கறிவேப்பிலை - ஒரு கொத்து
  •  எண்ணெய் - தேவைக்கு



செய்முறை :

Step 1.
முதலில்பருப்பை அலசி விட்டு குக்கரில் வேக வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி வரமிளகாயை கிள்ளி போட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.

Step 2.
அதில் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கேரட், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அடுத்து கத்திரிக்காய் சேர்த்து லேசாக வதக்கவும்.

Step 3.
வதக்கிய காய்களை வேக வைத்திருக்கும் பருப்பில் சேர்த்து மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு, இரண்டு தம்ளர் தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக விடவும்.

Step 4.
இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றி மேலே மல்லித்தழை தூவவும்.

Step 5.
ஒரு கப்பில் மினி இட்லியை போட்டு மூழ்கும் அளவு சாம்பாரை ஊற்றி மேலே 2 தேக்கரண்டி நெய் விட்டு சாப்பிடவும்

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி