உசிலி உப்புமா



தேவையானவை

  •  பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ,உளுத்தம்
  •  பருப்பு - 50 கிராம்
  •  மிளகாய் வற்றல் - 7
  •  பச்சை மிளகாய் - 5
  •  பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
  •  இஞ்சி - ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
  •  தேங்காய் (துருவியது) - 1 கப்
  •  ரவை அல்லது கோதுமை ரவை அல்லது பம்பாய் ரவை - 150 கிராம்
  •  கடுகு, உளுந்து - 1 டீஸ்பூன்
  •  பச்சை மிளகாய் - 2
  •  மிளகாய் வற்றல் - 1
  •  தேங்காய் எண்ணெய் - 1/2 கப்
  •  தண்ணீர் - இர‌ண்டரை டம்ளர்
  •  முந்திரிப் பருப்பு (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
  •  நெய் - 1/2 கப்


செய்முறை : 

Step 1.
முதலில் சொல்லியிருக்கும் பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊறப் போட்டு பிறகு தண்ணீரை முழுவதுமாக இறு‌த்து‌விட வேண்டும்.

Step 2.
இரண்டாவதாக சொல்லியிருக்கும் வகைகளை அத்துடன் கலந்து கரகரப்பாக மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து மேற்சொன்ன கலவையை ஆவியில் வேகவைக்கவும்.

Step 3.
வெந்தவுடன் இதை ஒரு பரந்த தட்டில் கொட்டி நன்றாகக் கட்டியில்லாமல் உதிர்க்கவும். இத‌ற்கு‌ப் பெய‌ர்தா‌ன் உசிலி. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம் முதலியவற்றை போட்டு நன்றாக வறுக்கவும். பிறகு அதில் தண்ணீரை விடவும்.

Step 4.
வேண்டிய அளவு உப்பைப் போட்டு தண்ணீர் கொதித்தவுடன் அதில் ரவையை போட்டுக் கிளறவும். உதிராக வந்த பிறகு - முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து அத்துடன் உசிலியையும் சேர்த்துப் போட்டு நன்றாகக் கிளறவும்.

Step 5.
இந்த உப்புமாவுடன் தேங்காய், அல்லது வெங்காய சட்டினி தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி