ரவை ஆப்பம்



தேவையானவை

  •  ரவை – ½ கப்
  •  வெல்லம் – ½ கப்
  •  மைதா மாவு – ¼ கப்
  •  கோதுமை மாவு - ¼ கப்
  •  நீர் – ½ கப்
  •  தேங்காய் - ¼ கப்
  •  ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
  •  பேக்கிங் சோடா - ¼ தேக்கரண்டி
  •  எண்ணெய்/ நெய் – பொரிக்க


செய்முறை : 

Step 1.
முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்துக் நீா் சோ்க்கவும். 5 நிமிடம் ஊற வைக்கவும். வெல்லம் சேர்த்து அது கரையும் வரை நன்கு கலக்கவும்.

Step 2.
மைதா மாவு, கோதுமை மாவு சேர்த்து நன்கு கலக்கவும். தேங்காய், ஏலக்காய் தூள் சேர்க்கவும். பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.

Step 3.
பின்பு சூடான எண்ணெயில் விடவும். மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும். சுவையான ரவை ஆப்பம் தயார்.

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி