பருப்பு இடியாப்பம்
தேவையானவை
- ரெடிமிக்ஸ் இடியாப்பம் – ஒரு கப்
- கடலைப்பருப்பு – கால் கப்
- வேகவைத்த பாசிப்பருப்பு – அரை கப்
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
- கடுகு – அரை டீஸ்பூன்
- நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன்
- தேங்காய் துருவல் – கால் கப்
- பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
- கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை :
Step 1.
முதலில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை 10 நிமிடம் நீரில் ஊறவிட்டு பிறகு குழையவிடாமல் முத்து முத்தாக வேகவிட்டுக்கொள்ளவும்
Step 2.
சுடு நீரில் ரெடிமிக்ஸ் இடியாப்பத்தை போட்டு வேகவிட்டு உதிர்த்துக் கொள்ளவும். அதாவது இடியாப்பம் மூழ்கும் வரை நீர் விட்டு கொதிக்கவிட்டு நீர் சுண்டியதும் பொல பொலவென்றும் உதிர்த்துக் எடுத்துக் கொள்ளலாம்.
Step 3.
பின்பு வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு போட்டு, உப்பு சேர்த்து வெந்த இடியாப்பம், தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். கொத்தமல்லித்தழை, பனீர் துருவல் தூவி பரிமாறவும்.

Comments
Post a Comment