ரவா இட்லி



தேவையானவை

  •  ரவை - 3 கப்
  •  பட்டாணி - 1/2 கப்
  •  எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  •  மிளகாய் - 2
  •  கறிவேப்பிலை - சிறிது
  •  கடுகு - 1 டீஸ்பூன்
  •  கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  •  தயிர் - 1 கப்
  •  உப்பு - தேவையான அளவு



செய்முறை :

Step 1.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.பின்னர் அதில் பச்சை பட்டாணி மற்றும் ரவையை சேர்த்து சிறிது நேரம் வறுக்க வேண்டும்

Step 2.
பின் அதனை இறக்கி குளிர வைத்து, அதில் தயிர் மற்றும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்

Step 3.
பிறகு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து நீரானது நன்கு கொதித்ததும், இட்லி தட்டில் மாவை ஊற்றி பாத்திரத்தினுள் வைத்து 6 நிமிடம் வேக வைத்து இறக்கினால் ரவா இட்லி தயார்

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி