பன்னீர் நூடுல்ஸ்



தேவையானவை
  •  நூடுல்ஸ் – 3 கப்
  •  காரட் – 1, பீன்ஸ் – 6
  •  பன்னீர் – 1 கப்
  •  முட்டை கோஸ் – ½கப்
  •  இஞ்சி – 1 மேஜைக்கரண்டி
  •  பூண்டு – 1 மேஜைக்கரண்டி
  •  பச்சை மிளகாய் – 3
  •  டொமாட்டோ கெட்ச்அப் – 3 மேஜைக்கரண்டி
  •  வினிகர் – 1 தேக்கரண்டி
  •  சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
  •  உப்பு – தேவையான அளவு
  •  மிளகு தூள் - 1 தேக்கரண்டி
  •  அஜினமோட்டோ – ஒரு சிட்டிகை
  •  வெங்காயத் தாள் – ஒரு கைப்பிடியளவு



செய்முறை :

Step 1.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சோ்த்து சிறிது நேரம் வதக்கவும்.

Step 2.
பீன்ஸ் காரட் மற்றும் முட்டை கோஸ் சேர்க்கவும். தீயை அதிகரித்து சிறிது நேரம் வதக்கவும். உப்பு, சர்க்கரை மற்றும் சிறிது அஜினமோட்டோ, பன்னீர் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

Step 3.
பின் சோயா சாஸ், டொமாட்டோ கெட்ச்அப், வினிகர் சேர்த்து நன்கு கிளறவும்.

Step 4.
பின்பு நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறவும். நல்ல மிளகு தூள், வெங்காயம் சேர்த்து நன்கு கிளறவும். பன்னீர் நூடுல்ஸ் தயார்.

Comments

Popular posts from this blog

தனியா சட்னி

அவல் தோசை

தக்காளி இட்லி